காதலனுடன் ஏற்பட்ட சண்டை; 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் மரணம்

இஸ்கந்தர் புத்திரி, நவம்பர் 2 :

ஜோகூரில் காதலனுடன் சண்டையிட்டதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி, இங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து, உயிரிழந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 1) கங்கார் பூலாயில் உள்ள தாமான் பூலாய் உத்தாமா அடுக்குமாடி குடியிருப்பில், இந்த சம்பவம் நடந்ததாக இஸ்கந்தர் புத்திரி மாவட்ட லவல்துறை தலைவர், துணை ஆணையர் ரஹ்மட் ஆரிஃபின் தெரிவித்தார்.

“சம்பவத்தின் சாட்சின்படி, ஒரு பெரிய சத்தம் கேட்கும் முன் இளம்பெண் தனது தொலைபேசியில் எதோ அமுக்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

“பின்னர், சுயநினைவற்ற சிறுமியின் உடல் தரை தளத்தில் கிடப்பதைப் பார்த்து, உடனடியாக காவல்துறைக்கு தான் புகார் அளித்ததாக சாட்சி கூறினார்,” என்று ரஹ்மட் இன்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அந்த இளம்பெண் முன்னதாக தனது காதலனுடன் சண்டையிட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது, இருவருக்குமிடையிலான வாக்குவாதம் முற்றியதில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவை கைவிட விரும்பினார்.

மேலும் “அந்தச் சிறுமி கட்டிடத்திலிருந்து விழுவதற்கு முன்பு, தன் காதலனை அழைக்க முயன்றார், ஆனால் அவரின் காதலன் அழைப்பை எடுக்கவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here