ஜோகூர் பாரு, நவம்பர் 3 :
நேற்று மாலை பெய்த கனமழையை தொடர்ந்து, ஜோகூரின் கோத்தா திங்கி மாவட்டம் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளம் காரணமாக தமது வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 பேராக அதிகரித்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்று 21 பேராக இருந்தது, இவர்கள் சிகாமாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
கோத்தா திங்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட 18 குடும்பங்களை உள்ளடக்கிய 72 பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக நேற்று இரவு 10 மணிக்கு டேவான் அல்-பரகாவில் நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டது என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று சுங்கை மூவாரில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் இன்றைய வானிலை சீராக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.