கோத்தா கினாபாலு, நவம்பர் 3 :
நேற்று பிற்பகல் 5 மணி நிலவரப்படி, சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை 327 குடும்பங்களைச் சேர்ந்த 1,001 பேராக அதிகரித்தது. இது நேற்று காலை 301 குடும்பங்களைச் சேர்ந்த 923 பேராக பதிவாகியிருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குனாக், பியூஃபோர்ட், சிபிதாங், தேனோம் மற்றும் கெனிங்காவ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ளவர்கள் என்றும் அனைவரும் மொத்தம் 11 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெனாம்பாங்கில் வெள்ள நிலைமை சீரடைவதை அடுத்து, அங்கு இயங்கி வந்த ஒரு நிவாரண மையத்தில் தங்கியிருந்தவர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டதால், அந்த நிவாரண மையம் மூடப்பட்டது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.