லோரியின் டயர் கார் மீது மோதியதில் ஓட்டுநர் காயம்

செப்பாங், நவம்பர் 3 :

எலைட் நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி 27.2 வந்து கிலோமீட்டரரில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், அவர் ஓட்டிச் சென்ற காரை லோரியின் டயர் மோதியதில், கார் ஓட்டுநர் மிகவும் பதற்றமான தருணத்தை எதிர்கொண்டார்.

பிற்பகல் 1.30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், பெரோடுவா அரூஸ் காரின் கூரை பலத்த சேதமடைந்ததுடன் ஓட்டுநரின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதாக, செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் A அஸ்மாடி அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், லோரி லிங்கி, நெகிரி செம்பிலானில் இருந்து ஈப்போ நோக்கி பயணித்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்தபோது லோரி ஓட்டுநர் தந்து லோரியிலிருந்து எதோ சத்தம் கேட்டதை உணர்ந்ததாகவும், உடனே அவசர பாதையில் வாகனத்தை நிறுத்தியதாகவும், அப்போது லோரியின் டயர் கழன்று காரில் மோதியதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், விபத்தில் சிக்கிய வாகனம் ஆய்வுக்காக IPD செப்பாங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் முன் வந்து தகவலை வழங்கி, காவல்துறையின் விசாரணைக்கு உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததுடன், இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here