பினாங்கு முதல்வர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்

ஜார்ஜ் டவுன்: பினாங்கு முதல்வர் செள கோன் இயோவ் கோவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சனிக்கிழமை (நவம்பர் 5) பத்து கவான் நியமன மையத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 அன்று, தனக்கு கோவிட்-19 தொற்று உறுதி  செய்யப்பட்டதாக செள கூறினார்.

தற்போதைய கஸ்தூரிராணி பட்டு மீண்டும் போட்டியிட மறுத்ததை அடுத்து, பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தலைவராக இருக்கும் செள தனது கட்சியின் இடத்தைப் பாதுகாக்க  அத்தொகுதிக்கு அனுப்பப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here