தம்பூனில் 4 முனைப் போட்டி – கோம்பாக்கில் 5 முனைப் போட்டி

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம், பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமுவுக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக சவால் விடுத்துள்ள நிலையில், தம்பூனில் நான்குமுனை போட்டிக்கான களம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பேராக் மந்திரி பெசாரான பைசல், பாரிசான் நேசனலின் அமினுதீன் ஹனாஃபியா மற்றும் கெராக்கான் தனா ஏரின் அப்துல் ரஹீம் தாஹிரையும் எதிர்கொள்கிறார். பைசல் 2018 இல் PH டிக்கெட்டில் தம்பூன் தொகுதியில் 5,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.

இதற்கிடையில், பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி நான்காவது முறையாகத் தக்கவைக்க விரும்பும் கோம்பாக் தொகுதிக்கு ஐந்து முனைப் போட்டி இருக்கும் என்று தேர்தல் ஆணையம் (EC) உறுதிப்படுத்தியது.

அவர் பிகேஆர் துணைத் தலைவர் அமிருதின் ஷாரி, பாரிசான் நேசனலின் முகமட்  சுல்கர்னைன் ஒமர்டின் மற்றும் கெராக்கான் தனா ஏரின் அஜீஸ் ஜமாலுடின் முகமது தாஹிர் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அஸ்மினின் இளைய சகோதரர் அஸ்வான் இன்று முன்னதாக போட்டியில் இருந்து விலகி அமிருதீனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here