வெப்பநிலை உயர்வு : மாணவர்கள் சாதாரண மற்றும் விளையாட்டு உடைகள் அணிவதற்கு கல்வி அமைச்சகம் அனுமதி

தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாதாரண உடைகள் மற்றும் விளையாட்டு உடை அணிந்துகொள்ள கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

“இந்த தளர்வு அனைவரின் மனநலன், உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் வெப்பமான காலநிலையின் போது, எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளையும் தவிர்க்க ஒழுக்கமான சாதாரண ஆடைகள் மற்றும் விளையாட்டு ஆடைகளை அணிவதற்கு சிறப்பு அனுமதி வழங்க அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. ” என்று அது இன்று புதன்கிழமை (மே 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மேலும் பள்ளி சீருடை அணியும் மாணவர்களுக்கு, கழுத்து டை அணிவதும் கட்டாயமில்லை” என்று அது மேலும் கூறியது.

சம்பந்தப்பட்ட அனைவரின் நல்வாழ்வையும் உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதற்காகவும், வானிலை நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here