“15வது பொதுத் தேர்தலில் நான் கைவிடப்பட்ட போதிலும், தேசிய முன்னணிக்கு எனது ஆதரவு தொடரும்” என்கிறார் ஹலிமா

கோலாலம்பூர், நவம்பர் 5 :

கோத்தா திங்கி தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹலிமா முகமட் சாதிக் 15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும்,தேசிய முன்னணிக்கு (BN) தொடர்ந்து ஆதரவளிப்பார்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் ஹலிமா, கடந்த நவம்பர் 1 ஆம் தேதி கட்சித் தலைமை (வேட்பாளர் பட்டியலில் தன்னை சேர்க்காதது) எடுத்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன் என்றார் .

ஹலிமாவின் கூற்றுப்படி, அவர் 15வது பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், மாறாக GE15 இல் வெற்றியை உறுதி செய்வதற்காக மைதானத்திற்குச் சென்று, தமது கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று கூறினார்.

செவ்வாயன்று, BN தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி GE15க்கான வேட்பாளர்களின் பட்டியலை அறிவிக்கும் போது, ​​பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தற்போதைய அமைச்சரவையின் கீழ் இருப்பவர்களில் ஹலிமா உட்பட நான்கு அமைச்சர்களுக்கு 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here