ஜோகூர் சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு

ஜோகூர் பாரு, நவம்பர் 9 :

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தரை, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அந்த சந்திப்பில் துங்கு மஹ்கோடா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

பிரதமரின் ஜோகூர் பயணத்தின் போது, மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடந்ததாக சுல்தான் இப்ராஹிமினுடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரியவருகிறது.

தற்போதைய பெரா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இஸ்மாயில் சப்ரி, இன்று பிற்பகல் ஆயிர் ஈத்தாமிலுள்ள டேவான் டெர்புகா தாமான் சூரியா ரோஸில் நடைபெறும் Majlis Ramah Mesra Bersama Warga Ayer Hitam நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here