அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற நபர் கைது

இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழைய இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அரசர் வருவதற்கு முன்பாக இருபுறமும் பொதுமக்கள் காத்திருந்த போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது. அரச குடும்பத்தினர் மீது பட்டதாக தெரியவில்லை.

இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை போலீசார் தடுத்து நிறுத்தி வைத்தனர். அப்போது அந்த நபர் “இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது” என்று கூச்சலிட்டதாக பிரிட்டனின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here