மலேசிய வான்வெளியில் பறவைகளால் விமானங்களுக்கு பாதிப்பு

மலேசிய வான்வெளியில் பறவைகள்  மோதுவதால் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக விமான போக்குவரத்து ஆணையம் (CAAM) தெரிவித்துள்ளது.  ஜனவரி முதல் பல்வேறு விமான நிலையங்களில் பறவைகள் மோதியதாக 117 அறிக்கைகள் வந்துள்ளன, கடலோரப் பகுதிகள் அல்லது சதுப்பு நிலங்களுக்கு அருகில் இவ்வாறு நடந்துள்ளது.

பறவை மோதல்களில் சுமார் 90% விமான நிலையங்களுக்கு அருகில்  புறப்படும் போது, அல்லது ​​தரையிறங்கும் போது நிகழ்கின்றன. கிழக்கு ஆசிய-ஆஸ்திரேலியா பறக்கும் பாதை என அழைக்கப்படும் பறவைகளின் வழித்தடத்தில் மலேசியா அமைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இந்தப் பறவைகளில் பல, இடம்பெயர்வின் போது உணவு மற்றும் தங்குமிடத்திற்காக கடலோர ஈரநிலங்களை நம்பியுள்ளன. ஜூலை மாத இறுதியில் இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு பெரும்பாலான பறவைகள் மலேசியா வழியாக இடம்பெயர்கின்றன. அவைகள் பிப்ரவரி இறுதியில் மே மாதத்தின் நடுப்பகுதி வரை மலேசியாவுக்குத் திரும்பி வடக்கே   இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்குச் செல்லும்.

எனவே, CAAM விமான நிலையங்களில் பறவைகளைத் தடுப்பதற்கும்,  அல்லது அகற்றுவதற்கும்  ஏற்கனவே உள்ள முறைகள் பயனற்றதாக இருந்தால், பறவைகளின் ஆபத்தை குறைக்க  புதிய பயனுள்ள வழிகளை முன்கூட்டியே தேட வேண்டும் என கூறியுள்ளது. விமான நிலையத்திற்கு அருகில் ஓடுபாதைகள் மற்றும் புறப்படும் பாதைகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிவேக மோதல்கள்  கணிசமான சேதத்தை ஏற்படுத்தலாம் மற்றும் விமானத்தின் பாகங்களை சேதப்படுத்தலாம் என்றும்  எச்சரித்தனர்.   ஒரு பறவை தாக்கியபோது அது பற்றி 48 மணி நேரத்திற்குள் நிகழ்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  விமானத் துறைக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here