நான் ஜாஹிட்டிற்கு விருப்பமானவன் அல்ல என்கிறார் கைரி

சுங்கை பூலோ: டவுன்ஹால் கூட்டத்தில்  பேசிய கைரி ஜமாலுடின்,  நான் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு விருப்பமானவன் அல்ல என்று கூறினார். ஏனெனில் நான் எப்பொழுதும் எல்லா முடிவுகளுக்கும் ஆம் என்று சொல்பவன் அல்ல. இருப்பினும்  பாரிசான் நேஷனலுக்கு விசுவாசமாக இருப்பதாக தெரிவித்தார்.

அம்னோ “அதன் நீதிமன்றக் குழுவாக” இருப்பதை தான் விரும்பவில்லை என்றார். இந்த வார்த்தை ஜாஹிட் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட முக்கிய அம்னோ தலைவர்களைக் குறிக்கிறது, அவர்கள் குற்றவியல் நம்பிக்கை மீறல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் விசாரணையில் உள்ளனர் அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் தனது கட்சியில் சீர்திருத்தங்களைக் காண விரும்புவதாகவும்  கைரி கூறினார்.

நீங்கள் ஒருமுறை அம்னோவை ஆதரித்திருக்கலாம் ஆனால் இனி இல்லை. அது மோசமான கட்சி என்பதால் அல்ல, சில மோசமான தலைவர்கள் இருப்பதால். இன்று முன்னதாக, ஜாஹிட் பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியில் போட்டியிடச் சொன்னதாகக் கூறியதை கைரி மறுத்தார்.

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி,  மற்றும்  தற்போதைய ஜனாதிபதியான அன்வார் இப்ராஹிமிடம் இருந்து நன்மதிப்பைப் பெறும்  நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக  கூறினார்.  நாட்டை வழிநடத்தி பிரதமராக வருவதற்கு தயார் என சுகாதார அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார். நான் மட்டும் அல்ல அனைவரும் அதை எதிர்நோக்குகிறோம். அடுத்து அமையும் அரசு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், வெளிப்படைத்தன்மையுடனும்  இருக்க வேன்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here