15வது பொதுத்தேர்தல்: நெகிரி செம்பிலானில் இதுவரை தேர்தல் விதிமீறல்கள் குறித்து 12 போலீஸ் புகார்கள் பதிவு

சிரம்பான், நவம்பர் 11:

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து முதல் ஆறு நாட்களில் நெகிரி செம்பிலானில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 12 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன என்று மாநில காவல்துறை துணைத் தலைவர், அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

அவற்றில் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்சிக் கொடிகளை கிழித்தல், இழுத்தல் மற்றும் அகற்றுதல் தொடர்பான புகார்களை விசாரிக்க ஐந்து விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

“ஜெம்போல், கோலாப் பிலா, ரெம்பாவ் மற்றும் சிரம்பான் ஆகிய இடங்களில் இந்த வழக்குகள் வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் “நாங்கள் இப்போது சந்தேக நபர்களைத் தேடி வருகிறோம்,” என்றும் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) வெளியிட்ட் ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379 மற்றும் திருட்டு 427 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் “தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து எங்கள் விசாரணையில் காவல்துறைக்கு உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here