வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசாங்கம் நேரடியாக உதவிகளை வழங்கும், மாறாக அந்தந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக வழங்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.
ஜோகூருக்கு கூட்டரசு அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட் உடனடி வெள்ள உதவியை எடுத்துக்காட்டிய அவர், இந்த உதவி மக்களுக்கு நேரடி உதவியாக வழங்கப்படுகிறது என்றார்.
இந்த உதவி நாடாளுமன்ற உறுப்பினர்களை சென்றடையாமல் இருந்திருக்கலாம், ஆனால் சேரவேண்டியவர்களை அதாவது அடிமட்ட மக்களைச் சென்றடையும் என்று, இன்று தேசிய கைவினை தினம் 2023 கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் கூறினார்.
பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ முஹைதின் யாசின் அவர்களின் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி மற்றும் இதர உதவிகளை வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் குறைந்தபட்சம் 300,000 ரிங்கிட் ஒதுக்க வேண்டும் என்ற பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அன்வார் பிரதமர் இவ்வாறு கூறினார்.










