தேர்தலை முன்னிட்டு உள்நாட்டுக்கான விமானப்பயணங்களை அதிகரிக்கிறது மலேசியன் ஏர்லைன்ஸ்

கோலாலம்பூர், நவம்பர் 12 :

15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு சுமூகமான மற்றும் நம்பகமான பயணத்தை உறுதி செய்வதற்காக, மலேசிய ஏர்லைன்ஸ் விமான பயணங்களுக்கான அதிர்வெண்களை அதிகரிக்கிறது.

தீபகற்பம், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் பல வழித்தடங்களில் A330 விமானங்களைப் பயன்படுத்துகிறது என்றும் விமானங்கள் 26 இல் இருந்து 44 ஆகவும்,  உள்நாட்டு சேவைகளில் 16இல் இருந்து 24  A330 விமானங்களாகவும் அதிகரிப்பதாக விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் விமான பயணஞ் சீட்டுகளுக்கான பல தள்ளுபடிக்கள் மற்றும் சலுகைகளையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here