3 லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் 34 வயது ஓட்டுநர் பலி

ஜோகூர் பத்து பஹாட்டில் உள்ள யோங் பெங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (பிளஸ்) இன்று காலை மூன்று கனரக வாகனங்கள் மோதிய விபத்தில் 34 வயது லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.  எட்டு டன் லோரி, ஒரு டேங்கர் லோரி, ஒரு டிரெய்லர் லோரி ஆகிய்வை விபத்தில் சிக்கியது  என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

மோதலைத் தொடர்ந்து, டிரெய்லர் லோரியின் ஓட்டுநர் காயமடைந்து வாகனத்தில் சிக்கிக் கொண்டார் என்று யோங் பெங் தீயணைப்பு- மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி ஹபீஸ் ஓத்மான் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மீட்க மீட்புக் குழுக்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் ஓட்டுநர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் அறிவித்ததாகவும் அவர் கூறினார். ஹபீஸின் கூற்றுப்படி, 37 மற்றும் 42 வயதுடைய மற்ற இரண்டு ஓட்டுநர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here