ஜோகூரிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் போதைப்பொருள் பாவனை; 63 பேர் கைது

ஜோகூர் பாரு, நவம்பர் 13 :

ஜோகூர் நகர மையத்திலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு வெளிநாட்டவர்கள் மற்றும் 59 உள்ளூர்வாசிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை 2 மணிக்கு அந்த வளாகத்தில் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையின் போது, குறித்த 63 பேரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

மேலும் “அனுமதிக்கப்பட்ட (12 மணி) நேரத்திற்கும் மேலாக வளாகம் இயங்கியது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதுடன் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, வளாகத்தின் உரிமையாளர்கள் ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர், அங்கு ஒவ்வொரு டிக்கெட்டும் அதன் சமூக ஊடகப் பக்கத்தின் மூலம் RM60 க்கு விற்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த வளாகத்தில் உல்லாசமாக இருந்த 567 நபர்களை போலீசார் சோதனையிட்டதில், அதில் அவர்கள் 16 முதல் 58 வயது வரையிலான 43 ஆண்கள் மற்றும் 19 பெண்களைக் கொண்ட மொத்தம் 62 பேர் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.”

“மேலும் அவ்வளாகத்தின் மேலாளர் என நம்பப்படும் 32 வயதுடைய ஒரு பெண்ணை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று அவர் கூறினார், சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது விசாரணைகளுக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here