மகாதீரைப் பார்த்து ஷஃபி ஏன் பயப்படுகிறார் : PH வேட்பாளர் கேள்வி

டாக்டர் மகாதீர் முகமட்டுடன்   நடந்த  பேச்சுவார்த்தையில்  நிலுவையில்  இருந்த  பிரச்சினைகளின் முடிவுகளை  வாரிசன் தலைவர் ஷஃபி அப்டல் ஒத்திவைத்தது  எதனால் என்று    முன்னாள் சபா மந்திரி இவான் பெனெடிக்  கேள்வி எழுப்பியுள்ளார்.  பெனாம்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு பிரச்சாரம் செய்யும் போது, மகாதீரிடம் அதிகம் பயம் கொண்டுள்ளார்  ஷஃபி, என்று பெனெடிக்  கூறியுள்ளர் .

ஷஃபி குற்றம் சாட்டியது போல்,  பக்காத்தான் ஹராப்பானின் எந்தவொரு தலைவரும், பகிரப்பட்ட வரி வருவாய்க்கான உரிமையை சபா திரும்பப் பெறுவதை எதிர்க்கவில்லை  என்றார். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த ஷஃபி, முடிவெடுப்பதற்கு முன் அப்போதைய பிரதமர் மகாதீருடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

பெட்ரோலியப் பொருட்களின்  5% விற்பனை வரிக்கு எதிராக சரவாக் மத்திய அரசு மீது  வழக்குத் தொடர்ந்த நிலையில் அவர்களுடன் வழக்கில் சேர அவர் மறுத்துவிட்டார் என்று பெனடிக் கூறினார்.  பெட்ரோலியப் பொருட்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கும் சட்டம் மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு 2019 இல் இவ்வாறு  நடந்தது.

ஷஃபி தேசிய அளவில் பல்வேறு உயர்மட்டக் குழுக்களில்  உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும்  2020ல் மகாதீர் ராஜினாமா செய்யும் வரை  காலதாமதம் செய்து,  அதன் பின்னர் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தார். ஷஃபி தனது முன்னாள் அமைச்சரவை சகாக்களை  வருவாய்ப் பிரச்சினையில்  அவதூறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சரவையில் வாரிசானுக்கு மூன்று  அமைச்சர்கள் இருந்த போது, சபாவின் உரிமைகளுக்காக பல முயற்சிகளை  செய்திருக்க முடியும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை  என்றும் பெனெடிக் குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here