சுங்கை பூலோவில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது : கைரி

சுங்கை பூலோவின்   மக்கள் தங்கள் தொகுதியில்  மாற்றத்தின்  அலையை எதிர்பார்க்கிறார்கள்  என்று  அடுத்த எம்பி ஆவதற்கான  பிரச்சாரத்தில் இருக்கும்  பாரிசான் நேஷனல் வேட்பாளர் கைரி ஜமாலுதீன் கூறினார்.  சுங்கை பூலோ  தொகுதி  என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.   இன்றே  எம்பி ஆவதற்கு  முடிந்தால்,  சுங்கை பூலோ மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என்று  மக்கள்  சந்திப்பு பேரணியின் போது கூறினார்.

சுங்கை பூலோவில் உள்ள வாக்காளர்கள் தம்மை புதிய எம்.பி.யாக தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.   சுகாதார அமைச்சராக  இருந்தபோது மிகவும் கடினமாக உழைத்துள்ளேன்.     அதே போல் சுங்கை பூலோ மக்களுக்காக   கடினமாக உழைக்க காத்திருக்கின்றேன்.   மக்கள் பக்கம் நின்று  போராடவும், மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக செயல்படவும் எனக்கு வாக்களியுங்கள் என்றார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 160,000 வாக்காளர்கள் உள்ளனர், இதில் மலாய்க்காரர்கள் (65%), சீனர்கள் (21%), இந்தியர்கள் (10%) மற்றும் 2% பேர் உள்ளனர்.

பேரணியில் இருந்த பிஎன் பொருளாளர்-ஜெனரல் ஹிஷாமுடின் ஹுசைன், மாற்றங்களைக் கொண்டு வரவும் இளம் வாக்காளர்களைக் கவரவும் சுங்கை பூலோவுக்கு பிஎன் அனுப்பிய “கேம் சேஞ்சர்” என்று கைரியை குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சராக கைரியின் அர்ப்பணிப்பு, கோவிட்-19 தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டபோது கடினமான பணிகளைச் சமாளிப்பதில் அவரது திறமையை நிரூபித்ததாக ஹிஷாமுடின் கூறினார்.  எனக்கு அவரை 20 வருடங்களாகத் தெரியும். அவர் கடின உழைப்பாளி.  எவ்வளவு கடினமான  பணியாக  இருந்தாலும்  தன்  கடமையை சரியாக நிறைவேற்றுவார் என்று பாராட்டினார்.

சுங்கை பூலோ தொகுதியில்  ஆர் ரமணன் (PH-PKR), கசாலி ஹமீன் (பெரிகாத்தான் நேஷனல்), அக்மல் யூசோஃப் (பெஜுவாங்), அஹ்மத் ஜுஃப்லிஸ் ஃபைசா (பார்ட்டி ரக்யாட் மலேசியா) மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான சையது அப்துல் ரசாக் சையத் லாங் அல்சகோஃப் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கிய ஆறு முனைப் போட்டியாகும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here