தீ விபத்தில் முன்னாள் மாநகர மன்ற இயக்குனர் உட்பட 3 பேர் பலி

கூச்சிங்: இங்குள்ள கம்போங் கித்தாவில் நேற்று இரவு வீடு தீப்பிடித்ததில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் கூச்சிங் உத்தாரா மாநகர மன்றத்தின் முன்னாள் இயக்குனர் அஃபெண்டி @ பாண்டி கெலி  69, அவரது மகள் அனீகா 35, மற்றும் மருமகள் நோர் ஹசிதா அஜிஸ் 22.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு இரவு 7 மணியளவில் அழைப்பு வந்ததாகவும், பலியானவர்களின் உடல்கள் வீட்டின் மேல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

நான்கு வாகனங்களும் தீயில்  அழிக்கப்பட்டன என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  இரவு 11 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார். தீக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here