நஜிப் தேர்தலில் நிற்காமல் இருந்திருந்தால் 2018ல் BN வெற்றி பெற்றிருக்கும் என்கிறார் சரவணன்

2018 ஆம் ஆண்டு தேர்தலின் போது  நஜிப் ரசாக் தேர்தலில் நிற்காமல் இருந்திருந்தால் பாரிசான் நேசனல் ஆட்சியில் இருந்திருக்கலாம் என்று  மஇகா துணைத் தலைவர் எம் சரவணன்  பேசியுள்ளார். நஜிப்பின்  உருவப்  பிரச்சனை, பாரிசான் நேஷனல்-லிருந்து இந்திய வாக்காளர்கள்  விலக  ஒரு காரணியாக இருந்தது என்றார்.  சரக்கு மற்றும் சேவை வரி என பல பிரச்சனைகளில் நஜிப்பின் நிலைப்பாடு எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டன,  எனவே   இந்தியர்கள் மாறிவிட்டனர்  என்று சரவணன்   கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் மலேசிய இந்தியர்களிடையே சிவப்பு ஐசி    (RED IC) பிரச்சினையைத் தீர்ப்பது போன்ற பல “வெற்று வாக்குறுதிகளை” அளித்தது  நிலையை  மோசமாக்கிவிட்டது, கூட்டணியின் 22 மாத ஆட்சிக் காலத்தில் அவர்கள்  அதை செய்யத் தவறிவிட்டனர்.  இப்போது அவர்கள் முந்தைய 22 மாதங்கள் போதுமானதாக இல்லை என்று கூறுகிறார்கள்.  அதனால் இந்தியர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர் என்றார்.

PH தலைவர்கள் நிறைய  தேவையற்ற விஷயங்களை அகற்ற  வேண்டும். நீண்ட  நாட்கள்  பிரதமராக  இருந்தவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.  அதனால் மக்கள் புதிய நபர்ளை தவிர்த்து எங்களுக்கு வாக்களித்தனர்.    இதுவே  மெலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களின் போது மக்களின்  ஆதரவு  பாரிசான் நேஷனல்-க்கு சாதகமாக மாறிவிட்டது என்று சரவணன் கூறினார்.

நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவு  பாரிசான் நேஷனல்-க்கு திரும்பும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here