முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பாஸ் வற்புறுத்துவதில்லை என்கிறார் முஹமட் சனுசி

ஈப்போ, நவம்பர் 14 :

பாஸ் தலைமையிலான மாநில அரசு இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு முஸ்லிம் அல்லாதவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நூர் தெரிவித்திட்டுள்ளார்

“பாஸ் கடந்த 32 ஆண்டுகளாக கிளாந்தானை ஆட்சி செய்து வருகிறது, இதயவரை அங்கு எல்லாம் அமைதியாக இருக்கிறது. யாரும் எதையும் மாற்றுமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை அல்லது வற்புறுத்தப்படவில்லை. கெடாவிலும் அப்படித்தான். நாங்கள் மக்களை இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்த மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

நடிகர் சுல் ஹுசைமி மர்சுகி என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவரால் @KroniRakyat என்ற டுவிட்டர் கணக்கில் பதிவேற்றிய பல வீடியோக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, PAS மத்திய தேர்தல் இயக்குனரான அவர் இவ்வாறு கூறினார்.

அந்த வீடியோக்களில், ஜுல் ஹுஸைமி என்று கூறப்படும் நபர் ஒருவர், தனக்கு விருப்பமானால், ‘காஃபிர்-ஹர்பி’ (முஸ்லிம் அல்லாதோருக்கான அரபு சொற்றொடர்) பலியிடுவேன் என்று கூறியிருந்தார். திரெங்கானுவில் நடந்த PAS நிகழ்வில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக இணையத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முஹமட் சனுசி கூறுகையில், அந்த வீடியோவில் யார் சொன்னாலும் அது பாஸ் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாக இருக்கலாம் என தான் நம்புவதாக கூறினார்.

“மேலும் “சுல் ஹுசைமி என்பவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, அவர் எமது கட்சி உறுப்பினர் இல்லை என்று நான் நம்புகிறேன். PAS ஐ இழிவுபடுத்த அந்த நபர் குறித்த நிகழ்வுக்கு வந்திருக்கலாம் மேலும் இவ்வாறு அவதூறு பேசிய அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று முஹமட் சனுசி கூறினார்.

43 வயதான ஜூல் ஹுசைமி, பேராக்கின் கெரிக் நகரைச் சேர்ந்த ஒரு நடிகர், மேலும் ரெம்ப்-இட் (2006) மற்றும் மேட் மோட்டோ (2016) திரைப்படங்களில் இருந்து ஸ்பார்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here