ஃபாஹ்மி ஃபாட்சிலின் விளம்பர பதாதைகளை சேதப்படுத்திய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், நவம்பர் 15 :

லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃபஹ்மி ஃபாட்சிலின் பிரச்சாரப் பொருட்களை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் கூறுகையில், லெம்பா பந்தாய் அமானா பிரிவு துணைத் தலைவரும், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான அவரின் இரண்டு விளம்பரப் பலகைகள் இழிவுபடுத்தும் வார்த்தைகள் ஒட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டதைக் காட்டும் வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற பின்னர், அவர் போலீசில் புகார் அளித்தார் என்றார்.

“ஸ்ரீ பந்தாய் மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள ஜாலான் பந்தாய் பெர்மை 1, ஜாலான் மரோஃப், பங்சார் மற்றும் ஜாலான் கெரிஞ்சி ஆகிய மூன்று இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427 மற்றும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் 4A (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழி செய்யும் ” என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் ஜனநாயக செயல்முறையை சீர்குலைக்கும் எந்த ஆத்திரமூட்டும் செயல்களையும் செய்ய வேண்டாம் என்று GE15 இல் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு அமிஹிசாம் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here