சலவை கடையில் அடையாளம் தெரியாத ஆடவரால் குத்தப்பட்டு காயமடைந்த பெண்

தெரெங்கானுவில் உள்ள செபராங் தாகிரில் உள்ள சலவைக் கடையில் கத்தியால் குத்தப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்தார். பல சமூக ஊடக தளங்களில் பரவிய ரகசிய கண்காணிப்பு கேமராவில் (CCTV) காட்சியில், பெண் முதுகில் குத்தப்பட்டு, அந்த நபரால் உதைக்கப்படுவதைக் காண முடிந்தது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியது தெரிந்தது.

X இல், முன்பு டுவிட்டரில், @MisrawatiMasri என்ற பயனர் தனது மைத்துனி இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறினார். “(தயவுசெய்து) அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். (மேலும்), எங்கும் செல்லும் போது நான் உட்பட பெண்களுக்கு ஒரு நினைவூட்டல். தயவு செய்து ஒரு நண்பரை அழைத்து செல்லுங்கள்… கூடுதல் கவனமாக இருங்கள். இந்த உலகில் பல பைத்தியக்காரர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

கோல தெரெங்கானு மாவட்ட துணைக் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் வான் முகமட் ஜாகி வான் இஸ்மாயில் கூறுகையில், 31 வயதான அவர் ஒரு  கத்தரிக்கோலால் குத்தப்பட்டதால் காயமடைந்தார். பிற்பகல் 3 சம்பவத்தில், முதுகில் குத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் தனியாக வளாகத்திற்குள் நுழைந்ததாக அவர் கூறினார். சந்தேக நபர் புரோட்டான் வீராவில் தப்பிச் செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரை அடித்து உதைத்தார்.

பாதிக்கப்பட்டவர் சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும், தானாக முன்வந்து கருவி மூலம் காயம் ஏற்படுத்தியதற்காகவும், கொள்ளை முயற்சிக்காகவும் குற்றவியல் சட்டத்தின் 324/393 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here