கிள்ளானா ஜெயாவில் எல்ஆர்டி இயல்பு நிலைக்குத் திரும்புகிறது RapidKL தகவல்

கிள்ளானா ஜெயா எல்ஆர்டி ரயில் பாதையில் உள்ள 16 நிலையங்கள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக மூடப்பட்டிருந்தது.  இன்று காலை மீண்டும்  அதன் சேவை  தொடர்ந்த   போது சில சிக்கல்களை சந்தித்தது.

சிலாங்கூரில் உள்ள ஜெலடெக் ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட  ரயிலில் இருந்து பயணிகள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பயணிகள் அனைவரும் அடுத்த ரயிலுக்காக நீண்ட நேரம் – (14 நிமிடங்கள் வரை)காத்திருக்க  வேண்டியிருப்பதாக புகார் கூறினர்.

இதன் காரணமாக வேலைக்குச் செல்ல தாமதமாகிறது என்றும்  அங்கு இருக்கும் ஊழியர்கள் பற்றியும் பயணிகள் புகார் கூறினர். 16 நிலையங்களுக்கான சேவை நிறுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், கிள்ளானா ஜெயா LRT பாதை நேற்று முழுமையாக திறக்கப்பட்டது. நவம்பர் 20 வரை இலவச பயணங்களை  வழங்குவதன் மூலம் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக Prasarana Malaysia Bhd தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here