பினாங்கு விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கவில்லை: குவான் எங்

பாரிசான் நேஷனல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 2018 பட்ஜெட்டில் பினாங்கு சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான ஒதுக்கீடுகள் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.  2018 பட்ஜெட்டில் விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட RM34 மில்லியனுக்கான  விவரங்களின் அட்டவணையை செய்தியாளர் கூட்டத்தில் காட்டினார்.

பட்ஜெட் ஆவணத்தில் குறிப்பாக பினாங்கு விமான நிலையம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை  என்று லிம் கூறினார், அவர் விமான நிலைய விரிவாக்கம் குறித்து போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக கூறினார்.

விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீடு இருப்பதாக வீ கூறுகிறார். மேலும், பினாங்கு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு RM34 மில்லியன் மிகக் குறைவு. இதை விரிவுபடுத்த RM700 மில்லியன் முதல் RM1 பில்லியன் வரை தேவைப்படுகிறது என்று DAP தலைவர் கூறினார். பினாங்கு விமான நிலையத் திட்டத்திற்கு இருக்கும் நிதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு  நிதியமைச்சர் என்ற முறையில் லிம் ஒரு  தனியார் நிறுவனத்தை  நாடியதாக வீ சமீபத்தில் கூறினார்.

பினாங்கு சர்வதேச விமான நிலையம் கடந்த 2012 இல் மேம்படுத்தப்பட்டது  அதனால்  ஆண்டுக்கு 6.5 மில்லியன் பயணிகளின் வருகையை  கையாள முடிகிறது.  2019 இல் ஆண்டுக்கு 8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வருகையை சிறப்பாக கையாண்டது.  இருப்பினும், ஆட்சியில் இருந்த PH அரசாங்கம் விரிவாக்கத் திட்டத்தைத் தொடர முடிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here