லிபியாவில் மோசமான வெள்ளப்பெருக்கு ; மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை -மலேசிய வெளியுறவு அமைச்சகம்

கோலாலம்பூர்:

டந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மார்சா எல் பிரேகாவில் இருந்த இரண்டு மலேசியர்களும் தொடர்பு கொண்டு, அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிபடுத்தப்பட்டதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் டெர்னா நகரில் இரண்டு அணைகள் உடைந்ததற்கு காரணமான டேனியல் சூறாவளிக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சகம் அங்குள்ள முன்னேற்றங்களைக் கண்காணித்து வருகிறது.

இதுவரை இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 8,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000 பேர் இன்னும் காணவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here