GE15: நான் எனது பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினேன்; ஆனால் பணத்தை ‘திருடவில்லை’ என்கிறார் அன்வார்

கோலாலம்பூர்: பிரச்சாரப் பாதையில் தனது இலக்கை விரைவாக அடைய வேண்டிய அவசரத் தேவைக்காக  ஹெலிகாப்டரைப் பயன்படுத்த வேண்டி இருந்ததாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இல்லையென்றால், நான் எனது இலக்கை அடைந்திருக்க முடியாது. ஆனால் நான் எந்தப் பணத்தையும் திருடவில்லை என்று அவர் தனது உரையில் கூறினார். கோலா கெடாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​கனமழை காரணமாக அவசரமாக தரையிறங்கியதாக அன்வார் மேலும் கூறினார்.

அது இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. நேற்று, பாகன் டத்தோவில் ஹெலிகாப்டரும் சில சிக்கல்களை எதிர்கொண்டது என்று அவர் மேலும் கூறினார். பிரச்சாரத்தின் போது அவர் “விலையுயர்ந்த” கார்களைப் பயன்படுத்துவதாக அவரது விமர்சகர்கள் சிலர் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

நான் அந்த காரை வாடகைக்கு எடுக்கவில்லை, ஷா ஆலத்தைச் சேர்ந்த உரிமையாளர், நான் எல்லா இடங்களுக்கு செல்ல அந்த  வாகனத்தைப் பயன்படுத்தலாம் என்று என்னிடம் கூறினார். ஆனால் தயவுசெய்து நவம்பர் 20 ஆம் தேதி அதைத் திருப்பித் தரவும் என்று அவர் கூறியிருப்பதாக அன்வார் தனது உரையில் தெரிவித்தபோது கூட்டத்திலிருந்து சிரிப்பொலி கிளம்பியது.

கோலாலம்பூரில் அவர் விலையுயர்ந்த கார்களைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் கிளந்தானுக்குத் திரும்பும்போது ​​அவர் புரோட்டான் சாகாவைப் பயன்படுத்துகிறார் என்று பெயர்களைக் குறிப்பிடாமல் அன்வர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here