GE15: லுமுட் கடற்படை தளத்தில் தேர்தல் பிரச்சார பிரசுரங்களை விநியோகித்ததற்காக மூவர் கைது

ஈப்போ: ராயல் மலேசியன் கடற்படை தளத்தில் தேர்தல் பிரச்சார பிரசுரங்களை விநியோகித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ கம்யூன் முகமட் யுஸ்ரி ஹசன் பஸ்ரி கூறுகையில், 19 முதல் 33 வயதுக்குட்பட்ட மூவரும் கடற்படையின் பிரோஸ்ட்டால் (இராணுவ போலீஸார்) செவ்வாய்கிழமை (நவம்பர் 15) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

அரசியல் கட்சிக்காக பிரசுரங்களை விநியோகித்ததற்காக பிளாக் A8 RKTLDM அருகே அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படை தளம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் புதன்கிழமை (நவம்பர் 16) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தேர்தல் குற்றச் சட்டத்தின் 24B பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று  முகமட் யூஸ்ரி கூறினார்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு இணங்கத் தவறியவர்களுக்கு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்  என்று அவர் கூறினார். பிரச்சார காலத்தில் தங்களுடன் ஒத்துழைத்த கட்சிகளுக்கும் காவல்துறை தனது நன்றியை தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here