உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்கள்

GE15 பொதுத் தேர்தலில் வாக்களிக்க  இருக்கும்   இளைஞர்கள் நல்ல ஊதியம் தரும் வேலைகள் மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் அரசு அமைய வேன்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மின்னியல் துறையில்   ( எலக்ட்ரீஷியன் ) படிக்கும்  மாணவர் டேனிஷ் கூறுகையில்,   பொதுவாக   எலக்ட்ரீஷியன்கள்  மாதம் 1,400 ரிங்கிட் சம்பாதிப்பதாகவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க இது போதாது என்றும் கூறினார்.  குபாங் பாசுவில் அதிக வேலை வாய்ப்புகள் இல்லை. எனவே வேலை பெற  கூலிம் மற்றும் சுங்கை பெட்டானி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்ல   வேண்டியுள்ளது  என்றார்.

அடுத்து அமைய இருக்கும் அரசாங்கம் சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலை  மற்றும் குபாங் பாசு போன்ற இடங்களுக்கு அதிக  முதலீடுகளை ஈர்க்கும்  வகையில் அமையும் என்று அவர் நம்புகிறார்.  கூட்டணி  கட்சி அதிக ஊதியத்தை முன்னிறுத்துவதால்  பெரிகாத்தான் நேஷனலுக்கு  வாக்களிக்க இருப்பதாக  டேனிஷ் கூறினார்.  அசிரன் மன்சர்   இந்த சனிக்கிழமை முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்  18 வயதான அசிரன் மன்சர், பினாங்கில் வேலை  தேட  திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்,  தனது சொந்த ஊரான அலோர் செட்டாரை விட  அங்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

மாணவர்   Aidil Aimen Mohd Farix கூறுகையில்  அதிகப்படியான  உயர்கல்வி கட்டணம் அவரது முக்கிய கவலையாக உள்ளது  என்றார்.  எஸ்பிஎம் வைத்திருப்பவர்கள் உயர்கல்வியைத் தொடராததற்கு இதுவே காரணம் என்றார். தன்னைப் போன்ற B40 (குறைந்த வருமானம்) குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதும் முக்கியமான  காரணம் என்று  கூறினார்.  அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அதிக மானியங்களை வழங்கவும், B40 குடும்பங்களின் கல்விச் செலவுகளை ஏற்கவும் வலியுறுத்தினார்.

மாணவர்  எம்.திபாகர்  தகுதியான மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்  வேண்டும் என்று கூறினார்.அவர்  சிஜில் கெண்டரான் ரிங்கன் (SKR) இல் 3.62 CGPA பெற்றிருந்தாலும், ஆறு வெவ்வேறு கல்லூரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு நிலையான வேலை இல்லை, வயரிங், ஏர் கண்டிஷனர்களை சர்வீஸ் செய்தல் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை பழுதுபார்த்தல் போன்றவற்றில் கைவினைஞராக உள்ளார்.

இவ்வாறாக மாணவர்கள் பலரும் தங்கள் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here