கைத்தொலைபேசிக்கு மின்னேற்றும்போது, மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்

போர்ட்டிக்சன், நவம்பர் 17 :

கைத்தொலைபேசிக்கு மின்னேற்றும்போது, மின்சாரம் தாக்கி வங்காளதேசத்தை சேர்ந்த காய்கறி தோட்டத் தொழிலாளி ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.

பாதிக்கப்பட்ட முகமட் அப்துல், 40, அவரது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்வதைக் காணாததால், அவரை அழைப்பதற்காக வீட்டிற்கு வந்த அவரது மேற்பார்வையாளர் அவரைக் கண்டுபிடித்தார்.

“மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட தீக்காயங்கள் அவரது மார்பில் இருந்ததாகவும் அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதை நான் கண்டேன். உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு மற்றும் காவல்துறையைத் தொடர்பு கொண்டேன். அந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரி பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு கடின உழைப்பாளி என்றும், எப்போதும் ஜமாத் தொழுகைக்காக மசூதிக்குச் செல்பவர் என்றும் அவர் கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, ‘பையா’ என்று அழைக்கப்படுபவர் இரண்டு வருடங்கள் இங்கு வேலை செய்வதாகவும் அவருக்கு மலேசியாவில் குடும்பம் இல்லை” என்றும் அவர் கூறினார்.

“இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவரது வீடு மூழ்கியதன் விளைவாக பாதிக்கப்பட்டவரின் தொலைபேசிச் சார்ஜர் வயர் ஈரமாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதனால் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என நம்புவதாகவும்” அவர் கூறினார்.

இதற்கிடையில், போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முஹமட் கூறுகையில், இறந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here