‘அல்லாஹ்’ வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைப் பிரச்சினை: தவறை மீண்டும் செய்ய வேண்டாம்-அறிவுறுத்தல் விடுத்த துணை பிரதமர்

கோலாலம்பூர்:

KK சூப்பர் மார்ட் பல்பொருள் அங்காடி ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை கொண்ட காலுறைகளை விற்பனை செய்தது போல, மலேசியாவில் உள்ள எனஓயா பல்பொருள் அங்காடிகள்ளும் அதுபோன்ற தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று நினைவூட்டுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் 3R களின் கீழ் (மதம், அரச குடும்பம், இனம்) வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், இவ்விவகாரம் தொடர்பில் KK .மார்ட் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“இது ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல, அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாத ஒரு பொறுப்பாகும்,” என்று அவர் நேற்றிரவு ட்ரோலாக் மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் நடந்த நோன்பு துறக்கும் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

“தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் , மதம், இனம் மற்றும் அரச குடும்பம் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினைகளை விளையாட வேண்டாம் என்றும் அனைத்து மலேசியர்களுக்கும் நினைவூட்டலை வழங்கிய மாட்சிமை தங்கிய மாமன்னன் சுல்தான் இப்ராஹிமினின் நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here