மலாக்காவில் Disneyland பூங்கா நிர்மாணிக்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 17:

மலாக்காவில் 2027 ஆம் ஆண்டுக்குள் Disneyland பூங்கா கட்டப்படவுள்ளதாக அண்மையில் வெளியாகிய செய்தி தொடர்பில், CNN நிருபர் ஹீதர் சென் Disney அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என அவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பில் CNN நிருபர் சென், இன்று வியாழக்கிழமை (நவம்பர் 17) Disneyயிடம் இருந்து பெற்ற அசல் விளக்கத்தைப் பற்றி டுவீட் செய்திருந்தார், ஆனாலும் Disneyயின் உத்தரவின் பேரில் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பதிவை நீக்கினார்.

பின்னர் “Disneyயின் உத்தரவின் பேரில் எனது டுவீட் இப்போது நீக்கப்பட்டுள்ளது. “ஆனால் நான் தெரிவித்த விடயம் முற்றிலும் உண்மையானது என்றும் மலாக்காவில் Disneyland theme park அமைக்க அதிகாரப்பூர்வ திட்டங்கள் எதுவும் இல்லை” என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

சீனா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆசியானில் முதல் தீம் பார்க் அமைக்கப்படும் என்று மலாக்கா பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழுத் தலைவர் டத்தோ முஹமட் ஜெய்லானி காமிஸ் நேற்று புதன்கிழமை (நவம்பர் 16) செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here