RM285 மில்லியன் திட்டம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டது :ரஃபிஸி

RM 285 மில்லியன்  மதிப்பிலான வடிகால் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆலையை மேம்படுத்தும் திட்டத்திற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறியதை சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் மறுத்துள்ளது.

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறி, தெற்கு கிள்ளானில் இத்திட்டம் தொடர்பான அக்டோபர் 27 தேதியிட்ட கடிதத்தை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒப்பந்தக் கடிதங்கள், முன்மொழிவுகளுக்கான கோரிக்கை மற்றும் திட்டங்களுக்கான ஏற்பு கடிதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆலையை மேம்படுத்தும் திட்டம் உண்மையில் 2020 நவம்பரில் அங்கீகரிக்கப்பட்டு அதன் கொள்முதல் செயல்முறை அக்டோபர் 2021 இல் தொடங்கியது என்று அது கூறியது.  தற்காலிக அரசாங்கம்  அதன் நடவடிக்கைகளில் கவனமாக உள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் அரசாங்கம் எந்த நிறுவனத்துடனும்  ஒப்பந்தம் செய்யவில்லை என்று  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ரஃபிசியின் கூற்றுகளை விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு  வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, நிதியமைச்சர் டெங்கு ஜஃப்ருல் அஜிஸும் ரஃபிஸியின் கூற்றுகளை மறுத்தார், இது சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கடிதம் என்று கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொது ஒப்புதலைப் பெற்ற பிறகும், அமைச்சகம் நிறுவனத்துடன் விவாதித்து அதன் பரிந்துரைகளை நிதி அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவர் விளக்கினார்.  தெங்கு ஜஃப்ருல்,கூறுகையில் தவறு நடந்திருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here