ஜோகூர் தொகுதிகளான சிம்பாங் ரெங்கம், பெங்கராங் மற்றும் கோத்தா திங்கி தேசிய முன்னணி வெற்றி

தேசிய முன்னணி (BN) ஜோகூர் தொகுதிகளான சிம்பாங் ரெங்காம், பெங்கராங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மூன்று இடங்களில் வெற்றி பெற்றது.

தேசிய முன்னணி (BN)வேட்பாளர் டத்தோஸ்ரீ ஐ.ஆர். ஹஸ்னி முகமது 18,312 வாக்குகள் பெற்ற வேளையில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் Dr. மஸ்லி மாலிக்  16,491 வாக்குகளைப் பெற்றார். ஆகவே  1,821 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்று தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

UMNO துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கோத்தா திங்கி நாடாளுமன்றத் தொகுதியில் 25,410 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 8,390 வாக்குகள் பெரும்பான்மையில் இரண்டு எதிரிகளை தோற்கடித்தார்.

பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் முகமட் ரித்வான் ரஸ்மான் 17,020 வாக்குகளும், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) வேட்பாளர் ஒன் ஜாபர் 4,903 வாக்குகளும் பெற்றனர்.

Datuk Azalina Othman Said 21,738 வாக்குகளைப் பெற்று 5,010 பெரும்பான்மையைப் பதிவு செய்தபோது பெங்கராங் தொகுதியை தக்க வைத்து கொண்டார். அவர் பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளரான ஃபைருல்நிசார் ரஹ்மத் 16,728 வாக்குகளும் பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் சே ஜகாரியா முகமது சாலே 3,374 வாக்குகள் பெற்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here