சுங்கை சிப்புட் தொகுதியில் கேசவன் வெற்றி – விக்னேஸ்வரன் தோல்வி

சுங்கை சிப்புட் : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சுங்கை சிப்புட் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் கேசவன் வெற்றி பெற்றார். 21,637 வாக்குகள் பெற்ற அவர் 1,846 வாக்குகள் பெரும்பான்மையில் விக்னேஸ்வரனைத் தோற்கடித்தார்.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 19,791 வாக்குகள் பெற்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் டத்தோஸ்ரீ இருதயநாதன் 8,190 வாக்குகள் பெற்றார்.

பெஜூவாங் கட்சி சார்பில் போட்டியிட்ட அகமட் ஃபாவுசி பின் முகமட் ஜாஃபார் 784 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்தார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான இந்திராணி 614 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

சுயேச்சை வேட்பாளர்கள் ஹாஜி பாஹா 598 வாக்குகள் பெற்றும் ராஜா நராசைம் 35 வாக்குகள் பெற்றும் வைப்புத் தொகையை இழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here