15ஆவது பொதுத் தேர்தலில் நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி 35 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரிகாத்தான் நேஷனல் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 112 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் 33 இடங்களையும், கபுங்கன் பார்ட்டி சரவாக் (20), தேசிய முன்னணி (16), கபுங்கன் ரக்யாத் சபா (நான்கு), வாரிசன் (இரண்டு), பார்ட்டி பங்சா மலேசியா மற்றும் சுயேச்சை வேட்பாளர் ரிதுவான் ரூபின் (தெனோம்) ஆகியோர் தலா ஒரு இடத்தையும் வென்றனர்.








