பினாங்கு விமான நிலைய மழைநீர் தொட்டி பணிகள் முடிவடையவில்லை

பினாங்கு சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தைத் தடுக்கும் மழைநீர் தொட்டியுடன் இன்னும் இணைக்கப்படவில்லை என்று மாநில சட்டசபையில் இன்று பேசப்பட்டது.  1.2 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டாலும், தொட்டியுடன் வடிகால்களை இணைக்கும் பம்ப் இன்னும் செயல்படவில்லை.

பினாங்கு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி (PH-Tanjung Bungah) கூறுகையில், தொட்டியின்  குழாய்கள் பொருத்தும் பணிகள்    இப்போதுதான்  வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினார்.  மழைநீர் வாய்க்காலில்  இருந்து  தொட்டிக்கு செல்வதற்கான திட்டத்தை வரைந்து வருவதாக  கூறினார்.

மழைநீர் தொட்டி முற்றிலும் பயனற்றது.   ஏனெனில்     MAHB நகரக்கூடிய   நீர் பம்புகளைப் பயன்படுத்தி ஓடுபாதையில்  இருந்து அதிகப்படியான மழைநீர்    ஆட்களின் மூலமாக   தொட்டிக்குள் செலுத்தப்படுகிறது.

பினாங்கு அரசாங்கம்   கம்போங் நாரனில் இருக்கும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு  RM4.5 மில்லியன் செலவில்  வெள்ளத்தைத் தடுக்கும் திட்டத்தையும் மேற்கொண்டு வருவதாக ஜைரில் கூறினார்.   முன்மொழியப்பட்ட விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் MAHB இன் பங்களிப்பு வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் அடங்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here