முஹிடின் ஊடகங்களிடம் பேசாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார்

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) மாலை 5 மணியளவில் அரண்மனையில் ஒரு மணி நேரம் செலவழித்த டான்ஸ்ரீ முஹிடின் யாசின், ஊடகங்களிடம் பேசாமல் இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்.

பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முன்னதாக மாலை 4 மணிக்கு அரண்மனையை அடைந்து கேட் 2 வழியாக உள்ளே நுழைந்தார்.

பொதுத் தேர்தலைத் தொடர்ந்து எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், செவ்வாய்கிழமை (நவம்பர் 22) மாலை 4.30 மணிக்கு முஹிடின் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இஸ்தானா நெகாராவுக்கு  மாமன்னர் வரவழைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here