அன்வாரை ஆதரித்து ஜாஹிட் கடிதம் அனுப்பியதை MIC தலைவர் உறுதிப்படுத்துகிறார்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதற்கு தேசிய முன்னணி ஆதரவை தெரிவித்து BN தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இஸ்தானா நெகாராவுக்கு கடிதம் அனுப்பியதை மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (பெரிகாத்தான் நேஷனல் தலைவர்) முஹிடினுக்கு (யாசின்) தங்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, அவர் (ஜாஹிட்) கடிதம் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். மேலும் பிஎன் நடுநிலை வகிக்கும் முடிவை எடுத்தார் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்  முன்னதாக, ஆன்லைனில் பரவி வரும் கடிதம் போலியானது என தேசிய முன்னணி நிராகரித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here