நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 7.1 விழுக்காடு குறைந்துள்ளது -சுகாதார தலைமை இயக்குநர்

கோலாலம்பூர், நவம்பர் 24 :

நவம்பர் 13 முதல் 19 வரையிலான 46வது வாரத்தில் (ME46/22) பதிவான டிங்கி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தில் 1,715 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 122 வழக்குகள் அல்லது 7.1 விழுக்காடு குறைந்து 1,593 வழக்குகளாக பதிவாகியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று வியாழக்கிழமை (நவம்பர் 24) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 23,057 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 54,570 ஆக உள்ளது, இது 31,513 சம்பவங்கக்ள் (136.7%) அதிகரிப்பைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

டாக்டர் நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 18 இறப்புகளுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு டிங்கி காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here