130 அம்னோ பிரிவுத் தலைவர்கள் ஜாஹிட் தொடர்ந்து கட்சியை வழி நடத்த ஆதரவு

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கட்சியை தொடர்ந்து வழிநடத்துவதற்கு சுமார் 130 அம்னோ பிரிவு தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இன்று ஆதரவு தெரிவித்தனர்.

வாங்சா மாஜு அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷஃபி அப்துல்லா, அம்னோ தொடர்பிலும் அம்னோவின் போராட்டத்தை அஹ்மட் ஜாஹிட் தொடர்ந்து நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த ஆதரவு உள்ளது என்றார். இன்று கட்சித் தலைவருடன் அம்னோ பிரிவுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் முகமட் ஷஃபி இதனைத் தெரிவித்தார்.

கட்சித் தலைவரின் தலைமையை சந்தேகிக்கும் பிரிவுத் தலைவர்கள் கட்சி ஒற்றுமையாக இருக்க ‘திரும்ப வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here