மிரி, நவம்பர் 26 :
இங்குள்ள தாமான் புலத்தான் மிரியிலுள்ள ஜாலான் புலத்தான் பூங்காவில் பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் குளவி கொட்டியதில் உயிரிழந்தார்.
சின் டெட் மின்@ டெட் புய், 72, என்ற முதியவரே குளவி கொட்டியதன் காரணமாக மயங்கிக் கிடந்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் (பிஜிஓ) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிற்பகல் 2.57 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என்றும் உடனே மிரி சென்ட்ரல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றார்.
“குழுவினர் வந்து பார்த்தபோது, பாதிக்கப்பட்ட ஆண் குளவிகளால் சூழப்பட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்தார் என்றும் அவரது உடலைச் சுற்றி குளவிகள் பறந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“RECEO முறை மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தினர் ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.