சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு நிதி உதவியின் இரண்டாவது கொடுப்பனவு டிசம்பர் 29இல் வழங்கப்படும் -மந்திரி பெசார்

ஷா ஆலாம், நவம்பர் 26 :

மாநில அரசு ஊழியர்களின் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று, சிலாங்கூர் மாநிலத்திற்கான 2023 பட்ஜெட்டின் நேரடி ஒளிபரப்பின்போது மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நேற்று அறிவித்தார்.

மத்திய அரசின் ஊதியத்தின் கீழ் மாநிலத்தில் பணிபுரிபவர்களுக்கும் இந்த பண உதவி வழங்கப்படும், என்று அவர் மேலும் கூறினார்.

Bantuan Khas Kewangan 2022 என அழைக்கப்படும் சிறப்பு நிதியினை சிலாங்கூர் அரசு ஊழியர்கள் முன்னதாக இந்த ஆண்டு ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டங்களுடன் இணைந்து ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சமாக RM1,000 பெற்றுள்ளனர்.

அதே தொகையின் இரண்டாவது கொடுப்பனவு டிசம்பர் 29 அன்று செய்யப்படும், அதே நேரத்தில் இறுதிக் கொடுப்பனவு அரை மாத ஊதியம் அல்லது குறைந்தபட்சமாக RM1,000 பிப்ரவரியில் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மந்திரி பெசார் 2023 ஆம் ஆண்டிற்கான RM2.45 பில்லியன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இது 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை விட மிக அதிகமாகும்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 2023 பட்ஜெட் பற்றி பேசிய அமிருடின், 2023ல் உலகப் பொருளாதார நிலை மற்றும் மலேசியா மற்றும் சிலாங்கூர் ஆகிய நாடுகளின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டது என்றார்.

“இதில் வேலை வாய்ப்புகள், வீடுகள், சுற்றுச்சூழல், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here