ஜோகூர் 2023ல் ஐந்து மில்லியன் அனைத்துலக சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கிறது

ஜோகூர் பாரு, நவம்பர் 26 :

2023 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஐந்து மில்லியன் அனைத்துலக சுற்றுலா பயணிகளை ஜோகூர் எதிர்பார்ப்பதாக மாநில சுற்றுலா, சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் கே. ராவன் குமார் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 2.8 மில்லியன் அனைத்துலக சுற்றுலா பயணிகளின் வருகையை ஜோகூர் மாநிலம் பதிவுசெய்துள்ளது என்றார்.

“இந்த ஆண்டு 1.5 மில்லியன் அனைத்துலக சுற்றுலா பயணிகளைப் பெறுவதே எங்கள் நோக்கமாக இருந்தது, ஆனால் நாங்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையான பயணிகளை ஈர்க்க முடிந்தது.

சிங்கப்பூர் தவிர, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தாண்டு வருகை தந்துள்ளனர்.

“அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக சீனா அதன் எல்லைகளைத் திறக்கும் போது, எதிர்பார்த்த இலக்கினை விட அனைத்துலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here