அம்பாங் ஜெயாவில் மரம் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன

அம்பாங் ஜெயா, நவம்பர் 27 :

இங்குள்ள ஜாலான் பண்டான் ஜெயா 2/3 மற்றும் பெர்சியாரான் பண்டான் ஆகிய இடங்களில் இன்று வீசிய புயல் காரணமாக, மரங்கள் விழுந்து நான்கு வாகனங்கள் சேதமடைந்தன என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை நடந்துள்ளது என்றும் இதனால் புரோத்தோன் வாஜா, நிசான் வென்னேட் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியன சேதமடைந்தன என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் குறித்த பகுதியில் துப்புரவு மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here