நீதிமன்ற வழக்குகள் இல்லதாவர்களை புதிய அமைச்சரவையில் நியமிக்க வேண்டும் என்கிறார் நிக் நஸ்மி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 27 :

நீதிமன்ற வழக்குகள் கொண்ட அல்லது நிலுவையில் உள்ள எவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் நியமிக்கப்படக் கூடாது என்று PKR துணைத் தலைவர், நிக் நஸ்மி நிக் அகமட் வலியுறுத்தியுள்ளார்.

அதாவது அவர்களின் வழக்குகளில் இன்னும் அவரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை, அப்படிப்பட்டவர்களை அமைச்சரவையில் நியமிக்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு உள்ளவர்களை அமைச்சரவையில் நியமித்தால், எதிர்காலத்தில் அது சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்று செத்தியவாங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் குறித்து பொதுமக்கள் கவலைப்படுகிறார்கள், இந்த நபர்கள் இல்லாத அமைச்சரவை மக்களுக்கு அத்தகைய அச்சங்களை குறைக்கும் ” என்றுநிக் நஸ்மி கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் அதற்கு தகுதியானவர்கள் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், கபுங்கான் பார்ட்டி சரவாக், கபுங்கான் ரக்யாட் சபா, மூடா, வாரிசான், பார்ட்டி பங்சா மலேசியா மற்றும் சுயேச்சை வேட்ப்பாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here