சிரம்பான், நவம்பர் 28 :
‘நவம்பர் 22ஆம் தேதி முதல் முதியவர் ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, அவர் கம்பபோங் சிகாய், குனுங் பாசீர், ஸ்ரீ மெனந்தியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதாகக் நம்பப்படுகிறது’ என்று கோலப்பிலா மாவட்ட காவல்துறை தலைவர், அம்ரான் முஹமட் கனி தெரிவித்தார்.
குறித்த முதியவர் காணாமல் போனதாக நவம்பர் 23 அன்று,’ அபு ஜாஹ்ரின் ஏ. ஹாசன், 67, என்ற தன்னுடைய சகோதரனைக் காணவில்லை’ என்று காணாமல்போனவரின் சகோதரியான நார்லிசா ஏ. ஹாசன், 53, என்பவரிடம் இருந்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்தது என்றார்.
“அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் நினைவாற்றல் குறைவாக உள்ளவர் என்றும் அவரது சகோதரி குறிப்பிட்டிருந்தார்.
நாங்கள் கிராம சமூக மேலாண்மை கவுன்சில் உறுப்பினர்களின் உதவியுடன் இன்னும் தேடி வருகிறோம். அவர் அடிக்கடி வெளியே செல்வதுதான் எங்களுக்குக் கிடைத்த முதல் தகவல். அவ்வாறு வெளியே போனாலும் அவர் வீடு திரும்பி விடுவார், ஆனால் இந்த முறை ஏழு நாட்களாகியும் அவர் வரவில்லை என்பது சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
காணாமல்போனவர் பற்றிய தகவல் அல்லது அவரின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிகுமாரும் அல்லது 013-6555548 என்ற எண்ணில் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் அம்ரான் கூறினார்.