சரவாக்கிற்கு கல்வியில் தன்னாட்சி அதிகாரமா ?

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கீழ் அமையும் புதிய மத்திய அரசு கல்வியில் மாநில சுயாட்சியை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என்று சரவாக் நம்புகிறது.    கல்வி  மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ரோலண்ட் சாகா வீ இன் கூறுகையில், இது அனைத்து சரவாக்கியர்களின் விருப்பமாக இருப்பதால்  உரிய பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

சுயாட்சி  வழங்கப்பட்டால் கொள்கை மற்றும் செயல்படுத்துதல் விஷயங்களை உள்ளடக்கியதாக   இருக்கும். இருப்பினும்  தேவையான நிதியுதவியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கும்  என்று சரவாக் மாநில சட்டசபையில் அடுத்த ஆண்டுக்கான மாநில பட்ஜெட் மீதான  உரையில் கூறினார்.  தற்போது கல்வி என்பது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டாலும், மாநில அரசு எப்போதுமே இத்துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.

பள்ளிகளின் கட்டிட வளர்ச்சியை மேம்படுத்துதல், கல்வியாளர்களுக்கான தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள்  செயல்படுத்தப்படும்.   நவம்பர் 26 அன்று, சரவாக்   முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபங்  மத்திய மற்றும் சரவாக் அரசாங்கங்களுக்கு இடையிலான    ஒற்றுமை   மேலும்  பலப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தற்போது சரவாக்கில் ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் சாகா கூறினார். இருப்பினும், கற்பித்தல்  மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்கள் காரணமாக ஆசிரியர்களை பணியமர்த்துவதில் இன்னும் சிக்கல்கள் உள்ளன.  சரவாக் தொற்று நோய்  தடுப்பு  மையத்தின் கட்டுமானம் 2023 முதல் பாதியில் தொடங்கப்படும் என்றும், 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் சாகா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here