லோரி மீது கார் மோதி, தீப்பிடித்து எரிந்ததில் பதின்ம வயது வாலிபர் மரணம்

செரியான், நவம்பர் 30 :

இங்குள்ள கம்போங் ஜிரோக், ஜாலான் செரியான்-ஸ்ரீ அமான் என்ற இடத்தில், நேற்று இரவு அவர் ஓட்டிச் சென்ற கார் 10 டன் எடை கொண்ட லோரி மீது மோதி, தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில், எரிந்த காரில் இருந்து வெளியே வர முடியாது போனதால், உயிரிழந்த 18 வயது டெர்ரி ரோன்ஸ்டன் ஜாங் என்பவருக்கும் 20 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது.

“சம்பவம் தொடர்பில் இரவு 10.24 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், 10 டன் எடை கொண்ட லோரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விபத்து ஏற்பட்டு, கார் தீப்பிடித்து எரிந்தது ” என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சரவாக் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறினார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில், முற்றாக தீப்பிடித்த வாகனத்திற்குள் இருந்ததன் காரணமாக வாலிபர் உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.

“அதே நேரத்தில் 55 வயது மற்றும் 49 வயதுடைய லோரி ஓட்டுநர்கள் இருவர் காயமடைந்து, சிகிச்சைக்காக செரியான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here